மயிலாடுதுறையில், வடமாநில தொழிலாளர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில், காவிரிநீரை கொண்டு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால், இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்வதால், இயந்திரம் நடவு செய்யும்போது, பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விடுகிறது.
இந்நிலையில், நல்லத்துக்குடி பகுதியில் கொல்கத்தாவை சேர்ந்த 12 ஆண் தொழிலாளர்கள், ஹிந்தி பாடல்களை பாடியபடி நாற்றுப்பறித்து, நடவு பணியில் ஈடுபட்டனர்.