புதுக்கோட்டையில் பாதிரியார் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டையை அடுத்த மாலையீடு பகுதியிலுள்ள பாதிரியார் ஜான் தேவ சகாயம் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 45 சவரன் தங்க நகைகள் மட்டுமே காணாமல் போனது தெரிய வந்தது.
கொள்ளை தொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 36 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டன. இந்தக் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.