தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மரக்கன்று நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில், சிதிலமடைந்த ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சீர்காட்சியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர் தனது வீட்டில் செடி நடுவதற்காக குழி தோண்டியுள்ளார்.
அப்போது சுமார் 15 கிலோ எடை உள்ள ஐம்பொன்னாலான ஆனந்த நடராஜர் சிலை சிதிலமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் நடத்திய ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட சிலையின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையிலானோர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.