கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி முதியவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
வெள்ளிகோட்டைச் சேர்ந்த முடியப்பன் என்பவர் ரப்பர் பால் வடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தினமும் அதிகாலையில் வெள்ளிகோட்டில் இருந்து முளகுமூடு பகுதிக்கு நடந்தே வேலைக்குச் செல்வது வழக்கம்.
அந்தவகையில் முளகுமூடு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற முடியப்பன், வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து கார் ஓட்டுநர் ஜிஜோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் முதியவர் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.