சிவகங்கையில் வாகன விபத்தில் உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தேவகோட்டை அடுத்த வக்கணகோட்டை கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் நித்திஷ் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து நித்திஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.