கும்பகோணம் அருகே, தனியார் விடுதியில் அதன் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அதிமான் புருஷன் கீழத்தெருவை சேர்ந்த தினசீலன், சுவாமிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த அவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தினசீலன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.