சென்னை திருவொற்றியூரில் போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு மாடவீதியில் பிரகாஷ் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்பவர், போலி தங்க மோதிரத்தை அடகு வைத்து 17 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் மற்றொரு போலி நகையுடன் வந்த காதர் மொய்தீன் அடகு வைக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து உஷாரான கடை உரிமையாளர் பிரகாஷ், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார், காதர் மொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.