திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இக்கோயிலில் அம்பாள் நின்ற வடிவில் காட்சியளிக்கிறார்.
விழாவை முன்னிட்டு 5 கி.மீ தூரம் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்ற பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.