சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி நியாயவிலைக்கடையில் அட்டைதாரர்களிடம் ஊழியர் 2 ரூபாய் பெற்றுக்கொண்டு 50 மில்லி மண்ணெண்ணைய் வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொல்லங்குடியில் தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான அரசு நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பற்றாக்குறை காரணமாக இந்தக்கடையில், பணிபுரியும் ஊழியர் அட்டைதாரர்களிடம் தலா 2 ரூபாய் பெற்றுக்கொண்டு 50 மில்லி மண்ணெண்ணைய் விநியோகம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.