ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், கிராமப்புறங்களில் உள்ள 2 லட்சத்து 56 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் 71 ஆயிரத்து 960 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கிராமப் புறங்களில் கான்கிரீட் மேற்கூரைகள் அமைப்பதற்காக 4 ஆயிரத்து 502 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.