அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவின் முதன்மையான டேபிள் டென்னிஸ் லீக் போட்டியான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டி ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. 8 அனிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.