கேரள மாநிலம், மூணாறு அருகே செந்நாய் தாக்கியதில் 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் சிலந்தியாரில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான 40 ஆடுகள் மேய்ந்து கொண்டிந்தன. அப்போது ஆடுகளை அழைத்து வருவதற்காக கனகராஜ் சென்று பார்த்த போது அனைத்து ஆடுகளும் செந்நாய் தாக்கி இறந்தது தெரிய வந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தமக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.