ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரிட்டன் பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கும், எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மரும் நேரடி விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, லண்டனில் தொலைக்காட்சி சேனல் படப்பிடிப்பு அரங்கில் வரும் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் இந்த விவாதம் அரங்கேறுகிறது.
நிகழ்ச்சியை நேரில் பார்க்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், நிகழ்ச்சியானது பின்னர் ஒளிபரப்பப்படும் என்றும் அந்த சேனல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.