குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, முதற்கட்டமாக கடந்த 15-ம் தேதி 300 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
அடுத்தகட்டமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வசித்து வரும் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.