கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை அதிக பயணிகள் பயன்படுத்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், 175 சதவீதத்திற்கு வந்தே பாரத் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
அதாவது 100 சீட்டுகளுக்கு 175 பயணிகள் முன்பதிவு செய்கின்றனர். இதில், 45 சதவீதம் பயணிகள் 26 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.