கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் ராணுவ பாதுகாப்பு பொருட்கள், படகுகள், பீரங்கிகள்,ராணுவ உடைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் பார்வையாளர்களுக்கு ராணுவ ஆயுதங்களை உபயோகிப்பது, போர் குறித்த ஒத்திகை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.