சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டு வரும் நிலையில் இல்லத்தரசிகள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது.