அடுத்த ஐந்தாண்டுகளில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரில், மக்களவை பாஜக வேட்பாளர் விஜய் குமார் துபேக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராஜ்நாத் சிங், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும், 2027-ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பாஜக அரசாங்கம் இப்படியே தொடர்ந்தால், 2070-ல் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் அவர் உறுதியுடன் கூறினார்.
மேலும், அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.