தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பட்டா மாறுதலுக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
விளாத்திகுளத்தை சேர்ந்த பெயிண்டரான சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமாக சுமார் மூன்றரை சென்ட் நிலம் உள்ளது.
இவர் கடந்த 2-ம் தேதி தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் வழங்கக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் விண்ணப்பத்தை பரீசிலிப்பதற்காக நில அளவையர் செல்வமாடசாமி என்பவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கியபோது, செல்வமாடசாமி கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.