தூத்துக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்துவந்த ஒரே நபரும் உயிரிழந்ததால் கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பசுமையாகக் காட்சி அளித்தது.
இந்நிலையில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் வசித்து வந்த வீட்டை விட்டும், கிராமத்தை விட்டும் வெளியேறினர்.
இறுதியாக கிராமத்தில் ஒரே ஆளாக வசித்து வந்த கந்தசாமி என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனாட்சிபுர கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.