கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார்.
கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, விவேகானந்தர் மண்டபத்தில், தியானம் மேற்கொள்கிறார். இந்நிலையில், பிரதமர் தியானம் செய்யும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவேகானந்த மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.