ராணிப்பேட்டையில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள் பட்டாசு வெடித்ததில் படுகாயம் அடைந்தனர்.
ஆர்.ஆர்.சாலையில் மூதாட்டி ஒருவரின் இறுதிச்சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு சென்ற உறவினர்கள் சாலையில் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
பட்டாசு வெடித்து சிதறியதில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.