2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் காணக்கூடும் என்றும் CLSA அமைப்பு கணித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேர்தல் முடிவுகளுக்கும் நிறுவனப் பங்குகளின் விலை உயர்வுக்கும் எப்போதுமே ஒரு சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது.
ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாட்டில் காலத்துக்கேற்ற பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் இடம்பெற்றிருந்தால், அந்த கட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது, பங்கு விலைகள் தானாக உயரும்.
மூன்றாவது முறை பிரதமராகும் போது , இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக்குவேன் என பிரதமர் மோடி உத்திரவாதம் தந்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் பங்குகளின் விலை உயரக் கூடும் என முதலீடுகளுக்கு ஆலோசனைகளை கூறும் CLSA அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதே போல ஆட்சியில் இருக்கும் பதவிக்காலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டங்களை நடைமுறை படுத்தியதாலும், மேலும் தனது அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்ட வரைவை வைத்திருப்பதாலும், இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் வரும் நாளில், பல நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கத்தை நாட்டை தலைமை தாங்கும் தலைவரின் ஆளுமை தீர்மானிக்கிறது. தலைவர் ஒரு சிறந்த ஆளுமை மற்றும் செல்வாக்கு பெற்றவராக இருந்தால், அவர் தலைமைக்காக நாட்டில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும்.
பிரதமர் மோடியின் தலைமையை உலகமே பாராட்டுகின்ற சூழலில், இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், இந்திய பங்கு சந்தையில் அரசு துறை நிறுவனங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட மிக சிறப்பாக செயல் பட்டன என்று சுட்டிக் காட்டியிருக்கும் இந்த அறிக்கை, 2024 தேர்தல் முடிவுக்குப் பிறகும், இதே போக்கு தான் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, L&T, NTPC, NHPC, PFC, ONGC, IGL,மற்றும் Mahanagar Gas பங்குகளும்,, வங்கிகளில்,HDFC, ICICI, Axis Bank மற்றும் IndusInd போன்ற வங்கிப் பங்குகளும், அசோக் லேலண்ட், அல்ட்ராடெக், பஜாஜ் ஃபைனான்ஸ், மேக்ஸ் ஃபைனான்சியல்ஸ், ஜொமேட்டோ மற்றும் டிமார்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும், மேலும் தொலைத்தொடர்பு தொடர்பான துறைகளில், பார்தி ஏர்டெல், இண்டஸ் டவர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் விலை அதிகமாகும் வாய்ப்பிருக்கிறது என்று CLSA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டிலும் சரி, 2019 ஆண்டிலும் சரி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு பங்குகளின் விலை அதிகமானது. அது போலவே இந்த ஆண்டும் நடக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
பொதுவாக அம்பானி, அதானி, டாடா, பங்குகள் விலை உயரும் என்பார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் தொழில் துறை சிறப்பாக செயல் படுவதால், இப்போதெல்லாம், இது பிரதமர் மோடி பங்குகள் என்றே சொல்லப்படுகின்றன.