கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தியானம் செய்யவுள்ளார்.
இதனை ஒட்டி, நேற்று கன்னியாகுமரி வந்த அவர், புகழ் பெற்ற பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்கு சென்றடைந்த அவர் தமது தியானத்தைத் தொடங்கினார்.
இன்று சூரிய உதயத்தின்போது சூரிய நமஸ்காரம் செய்த அவர், சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் தனது தியானத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறையைச் சுற்றி மத்திய பாதுகாப்பு படை, கடலோர காவல் படை, கடற்படை, தமிழக காவல்துறை என ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.