பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 57 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதனையடுத்து ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பீகார், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது..