டெல்லியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஹரியானா அரசு தரவேண்டிய நீரை விடுவிக்காததால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீர் வீணாவதை தடுக்க நீர்வாரியம் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தண்ணீரை வீணாக்கினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியின் சாணக்யாபுரி, கீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக லாரி மீது ஏறி மக்கள் குடிநீரை எடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கீதா காலனியில் ஏராளமானோர் வசிக்கும் நிலையில், ஒரு டேங்கர் லாரியில் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.