“சிறுநீர்ப்பை புற்று நோயால் இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக” தனியார் மருத்துவமனை மருத்துவர் வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓவியங்கள் மூலம் சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய “கேன்வாஸ் ஆஃப் ஹோப்” என்ற ஒவிய கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை ஓவியர் ட்ரொட்ஸ்கி மருது மற்றும் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் வைத்தீஸ்வரன்,
“இந்தியாவில் சிறுநீர்ப்பை புற்றுநோய் 17-வது இடத்தில் உள்ளது எனவும், இதற்கு, புகைபிடித்தல் உள்ளிட்டவையே காரணம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஓவியர் மருது, “இந்த புகைப்படங்கள் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளது” என்றார்.