சென்னை, அம்பத்தூர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி – பிரதீபா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டரை வயதில் யாஷிகா என்ற மகள் உள்ள நிலையில் குழந்தை யாஷிகா வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, தெரு நாய் ஒன்று சிறுமியை சரமாரி கடித்தது, இதில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் பிரதீபா 20 நிமிடமாக போராடி சிறுமியை மீட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தொடரும் நாய்க்கடி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கைகளை மண்டல அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.