என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
2003-ம் ஆண்டு சென்னையில் பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததன் மூலம் கவனம் பெற்றவர் வெள்ளத்துரை. இ
வர் வீரப்பனைத் தேடிய சிறப்புப் படையிலும் இடம் பெற்றிருந்தார். திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை, இன்று பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் ஒரு நாள் முன்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.