கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியாளர் வீட்டில் 18 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரோஜினி நகரைச் சேர்ந்த விஜயராகவன், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சுமார் 18 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற