திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடிகள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
வல்லத்து நம்பி குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று கரடிகள், வீட்டின் முன்புறம் இருந்த மரத்தில் உள்ள சப்போட்டா பழங்களை சாப்பிட்டிருக்கின்றன.
தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.