திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை - நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!
Jul 28, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 29, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நத்தமேடு ஏரி நிரம்பியதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

நத்தம்பேடு பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில், பாதிப்புகள் குறித்து செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனிடையே வேலூர் மாவட்டத்தின் மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சிமன்ற நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட நிர்வாகம் வெள்ள நீரை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical deptNathamedu lake filledtamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies