நடிகைகக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தியதாகவும், இதனை மறைக்க சில பெண்களுக்கு பணம் கொடுத்ததாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஸ்டார்மி டேனியல் என்ற நடிகைக்கு தேர்தல் நிதியை தானமாக அளித்ததாக எழுந்த புகாரில் ட்ரம்ப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் வழக்கு ஒன்றில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாக கருதப்படுகிறது.
மேலும், குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவது கேள்விக்குறியாகி உள்ளது.