சினிமா பட பாணியில் மலக்குடலில் கடத்தி வரப்பட்ட 33 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த பயணி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், அவரை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது மலக்குடலில் பேஸ்ட் வடிவிலான 462 கிராம் தங்கத்தை, கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.