சென்னையில் காலணி கடை மீது பெட்ரோல் குண்டுவீசிய இளைஞர் உள்பட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் சாகுல் அமீது என்பவர் காலணி கடை நடத்தி வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடைக்கு முன்பு பெட்ரோல் குண்டுவீசி சென்றனர்.
இதுகுறித்து சாகுல் அமீது புகாரளித்த நிலையில், விக்னேஷ் என்ற இளைஞர் உள்பட 2 சிறுவர்களை கைது செய்தனர்.
விக்னேஷை சிறையில் அடைத்த போலீசார், சிறுப்வர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.