ஜியோ நிதி சேவை நிறுவனம் Jio Finance App என்ற செயலியை அறிமுகம் செய்தது.
பீட்டா வெர்ஷனாக வெளிவந்துள்ள இந்த செயலி மூலம் யுபிஐ, டிஜிட்டல் பேங்கிங் மற்றும் பல நிதி சேவைகளை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்திய சந்தையில் கூகுள் பே, போன் பே, அமேசான் பே என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் தற்போது ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகமாகி உள்ளது.