கடந்த 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட கூடுதலாக, 8.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.
குறிப்பாக கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், 7.8 சதவீதமாக ஜிடிபி பதிவாகியுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை இந்தப் புள்ளிவிவரம் உணர்த்துவதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.