தமிழகத்தில், “கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறப்பதாக இருந்த நிலையில், தற்போது 10-ம் தேதி திறக்கப்படும்” என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது மக்கள் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
மேலும், பீகார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயிலின் வெப்ப அலையை தாங்க முடியாமல் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
“ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10-ம் தேதி திறப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.