நிகழாண்டில் 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா முன்னேறும் என பொருளாதார நிபுணர் எஸ்.பி. சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தடைகளை சந்தித்த போதிலும் 8.2 சதவீதம் என்ற சாதகமான அம்சத்தில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
மேலும், நிகழ் 2024-25 நிதியாண்டில் 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 7 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் இந்தியா உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.