புதுச்சேரியில் வாக்கு எண்ணும் நாளில் அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாகவும், இதற்காக 1002 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக ஐந்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அவர் ஆய்வு செய்தார்.