இமாச்சல பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக பிலாஸ்பூரில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இமாச்சலத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள டிங்கு வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.