கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்த நிலையில் யானையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மருதமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது யானை பிளிரும் சத்தம் கேட்டு அருகே சென்று பார்த்தபோது, பெண் யானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு குட்டியுடன் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சையளித்தும், உணவளித்தும் வந்த நிலையில் யானையின் உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.