புதுச்சேரியில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடற்கரை சாலையையொட்டி உள்ள தூய்மா வீதியில் தாறுமாறாக ஓடிய கார் அப்பகுதியில் சென்றவர்கள் மீது மோதிச்சென்றது.
இதில் 8 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை பின்தொடர்ந்து சென்று ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காரை ஓட்டியவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கமல்நாத் என்பது தெரியவந்தது.