வார விடுமுறையை முன்னிட்டு ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமைலையான் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமான திருப்பதி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர்.
இதனால் இலவச தரிசனத்தில் 5 கி.மீ தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அளவுக்கு அதிகமான பக்தக் கூட்டத்தால் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.