போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர் பிஎஃப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் , தமிழ்நாடு போக்குவரத்து பணிமனையில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவருக்கான சம்பளம் பிடித்தம் பணம் உள்ளிட்ட பலன்கள் வேண்டி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்ற தமிழ்செல்வன், அங்குள்ள பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், பின்னர் அவரிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.