தருமபுரியில் திருமணமான 4 மாதங்களில் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராயபுரம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் சேகர். இவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர் பிரியங்காவும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரட்தியடைந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.