மும்பை பன்வெலில் நடிகர் சல்மான் கான் கார் மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இதற்காக பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை விலைக்கு வாங்கியதும் தெரியவந்துள்ளது.
அண்மையில் சல்மான்கானின் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.