தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகே உள்ள கண்மாயில் தடையை மீறி மீன்பிடித்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சிபுரம் பகுதியில் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கன்மாய் அமைந்துள்ளது.
மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் நிரந்தர வலை அமைத்து மீன்களை பிடித்து வந்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற குறித்து நேரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் வலையை அப்புறப்படுத்தி 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.