சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சாலையில் திடீரென 9 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மெட்ரோ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரங்களால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.