நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலவரங்களை கட்டுப்படுத்துவது குறித்த செயல்முறை ஒத்திகை நடைபெற்றது.
நாடடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்ககல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கலவரங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறையினரின் செயல்முறை ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் கண்ணீர் புகை குண்டு வீசுவது, தண்ணீர் பீச்சி அடித்து கும்பலை கலைப்பது, தூப்பாக்கி சூடு உள்ளிட்ட செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முன்பு காவல்துறையினர் செய்து காட்டினர்.